Print this page

“சுப்பராயன் மசோதா” விளம்பரம். குடி அரசு - செய்தி விளக்கக் குறிப்பு - 08.01.1933 

Rate this item
(0 votes)

கோவில் பிரவேச மசோதா என்னும், டாக்டர் சுப்பராயன் மசோதாவுக்கு சிறிது காலத்துக்கு முன் ஜிண்டான் மாத்திரைக்குச் செய்யப்பட்ட விளம்பரத்துக்கு மேலாகவே செய்யப்பட்டு வருகின்றது. இவ்விளம்பரம் தோழர் ராஜகோபாலாச்சாரி சிபார்சின் மீது தோழர் காந்தியாலும் செய்யப் பட்டு வருவதைக் கண்டு டாக்டர் சுப்பராயனைப் பாராட்டாதவர்கள் இல்லை. டாக்டர் சுப்பராயன் அவர்களுக்கு இது ஒரு சகட யோகமேயாகும். ஆனால் மசோதாவின் யோக்கியதை என்ன என்பதையும், பயன் என்ன என்பதையும் இதன் கருத்து என்னவென்பதையும், எதை உத்தேசித்து இந்தப் பித்தலாட்ட பிரசாரம் மகாத்மாக்களாலும், தேசீய பத்திரிக்கைகளாலும் நடைபெருகின்றது என்பதை சீக்கிரத்தில் நாமே விவரமாக வெளிப்படுத்த இருக்கிறோம். சிறிது தாமதம் ஆவதால் ஒன்றும் முழுகிப்போகாது. ஆதலால் அது சம்மந்தமாக வந்திருக்கும் பல வியாசங்களை வெளியிடாததற்கு நிருபர்கள் பொருத்துக் கொள்வார்களாக. 

குடி அரசு - செய்தி விளக்கக் குறிப்பு - 08.01.1933

Read 97 times